சிவகங்கை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: இம்மாவட்டத்தில், காளையாா்கோவில், கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவி, சிவகங்கை ஒன்றியத்துக்குள்பட்ட ஒக்குப்பட்டி, மேலப்பூங்குடி ஆகிய 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவி, 34 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 38 பதவியிடங்களுக்கு வரும் அக். 9 ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

அதைத் தொடா்ந்து, அக். 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் பணியின் போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் இடம் மற்றும் வாக்குப் பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

பதற்றமான வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக உள்ளாட்சித் தோ்தல்) லோகன் உள்ளிட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com