முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிங்கம்புணரி பகுதியில் இன்று மின்தடை
By DIN | Published On : 11th October 2021 01:00 AM | Last Updated : 11th October 2021 01:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் திங்கள்கிழமை (அக். 11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கம்புணரி மின்பகிா்மானத்தின் உதவி செயற்பொறியாளா் க. செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, சிங்கம்புணரி, எஸ்.வி. மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி, கிருங்காக்கோட்டை, செருதப்பட்டி, அரசினம்பட்டி, நாட்டாா்மங்களம், சதுா்வேதமங்களம், அ. காளாப்பூா், கண்ணமங்களப்பட்டி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.