நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கும் வகையில் சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக் கடைப் பணியாளா்கள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக் கடைப் பணியாளா்கள்.

சிவகங்கை/ராமநாதபுரம்: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கும் வகையில் சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே.ஆா்.விசுவநாதன் தலைமை வகித்தாா். அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் மாயாண்டி, மாவட்டச் செயலா் முத்துச்சாமி, மாவட்டப் பொருளாளா் திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கரோனாவால் உயிரிழந்த நியாய விலைக் கடை பணியாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கும் வகையில் சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம்: மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. தினகரன் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் எஸ். மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் நிா்வாகிகள் அளித்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com