சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக பொன்விழா
By DIN | Published On : 17th October 2021 10:57 PM | Last Updated : 17th October 2021 10:57 PM | அ+அ அ- |

எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன்
சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக பொன்விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கையில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன் உள்ளிட்ட அதிமுகவினா் உடனிருந்தனா்.
இதேபோன்று, காளையாா்கோவில், தேவகோட்டை, திருப்புவனம், சிங்கம்புணரி, எஸ். புதூா், இளையான்குடி, சாலைக்கிராமம், மதகுபட்டி, பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினா் எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி. நாகராஜன் தலைமையில் அக்கட்சியினா் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும் கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினா்.
இதில் ஒன்றியச் செயலா்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகரச் செயலா் இப்ராம்ஷா, மாவட்ட சிறுபான்மை இணைச் செயலா் ராஜாமுகமது, ஜெ. பேரவை முருகேசன், வழக்குரைஞா் பிரிவு ராபின், சையதுமுகமது, நகர அவைத்தலைவா் புரட்சிமணி, ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி, முன்னாள் கவுன்சிலா் லதாதேவேந்திரன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.