மானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா

மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. 
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் நடைபெற்ற முளைப்பாரி உற்சவ விழா
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் நடைபெற்ற முளைப்பாரி உற்சவ விழா


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. 

இக்கோயிலில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு முளைப்பாரி உற்சவ விழா தொடங்கியது. அப்போது ஏராளமான பெண்கள் முளைப்பாரி வளர்க்க வேண்டி விரதம் தொடங்கி கோயிலிலேயே முளைப்பாரி வளர்த்தனர். முளைப்பாரி வளரும் நாட்களில் தினமும் இரவு விரதம் இருந்து வந்த பெண்கள் கோயிலில் கூடி அம்மனுக்கு உகந்த கும்மி பாடல்கள் பாடினர்.

அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு முளைப்பாரி கரைக்கும் உற்சவத்தை முன்னிட்டு விரதம் இருந்து வந்த பெண்கள் முளைப்பாரி சட்டிகளை குண்டு முத்துமாரியம்மன் சன்னதி முன்பு வைத்து பூஜைகள் நடத்தினர். 

அதன் பின்னர் முளைப்பாரிச் சட்டிகளை தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். கோயிலுக்கு அருகே உருவாக்கப்பட்டிருந்த நீர்நிலையில் முளைப்பாரிகளை கரைத்தனர்.

பெண்கள் சுமந்து வந்த முளைப்பாரிகள் நீர்நிலையில் கரைக்கப்பட்டன
பெண்கள் சுமந்து வந்த முளைப்பாரிகள் நீர்நிலையில் கரைக்கப்பட்டன

முளைப்பாரி சுமந்த பெண்களுக்கு கோயிலில் சட்டைத் துணி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு கொண்ட பிரசாதம் வழங்கப்பட்டது. 

முளைப்பாரி விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு கோயிலில் சுபமங்கள பிரசாதம் வழங்கப்பட்டது
முளைப்பாரி விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு கோயிலில் சுபமங்கள பிரசாதம் வழங்கப்பட்டது

முளைப்பாரி உற்சவத்திற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மற்றும் மாதாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com