மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழா 

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
ஜெயந்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவர் சிலை இரவு மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
ஜெயந்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவர் சிலை இரவு மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
சிவகங்கை மாவட்டம், மானமதுரையில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவர் சிலைக்கு அருகே உள்ள அ.லிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பால்குடம் சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தி மாலை அணிவித்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். தேவர் சிலை முன்பு ஏராளமான தேங்காய்கள் உடைக்கப்பட்டது. 
அப்போது தேவர் புகழ் பாடும் பாடல்கள் ஒளிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேளதாளத்துடன் மானாமதுரை தேவர் சிலைக்கு வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தி தேவரை வழிபட்டனர். தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுந்தராபுரம் வீதியிலுள்ள தேவர்சிலை இரவு மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. 

மானாமதுரை நகர் பகுதி வழியாக பசும்பொன்னுக்கு தேவர் நினைவிடத்திற்கு சென்றவர்கள் மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தேவர் சிலைகளுக்கும் தேவர் உருவப் படங்களுக்கும் அந்தந்த கிராமத்தினர் மாலைகள் அணிவித்தும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியும் ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.
இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளிலும் பல கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தேவர் சிலைகள் உள்ள கிராமங்களில் அக்கிராம மக்கள் தேவர் சிலைகளுக்கு பாலாபஷேகம் நடத்தி பொங்கல் வைத்து பூஜைகள், தீபாராதனை நடத்தி வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com