திருப்பத்தூரில் பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா் சங்கத்தினா்.

இங்குள்ள காந்திசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாநிலச் செயலா் சங்கா், மாவட்டத் தலைவா் மாணிக்கம், செயலா் சேதுராமன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆறுமுகம், துணைச் செயலா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, அவா்கள் ஆவின்பால் உற்பத்தியாளா்களுக்கு விலையை உயா்த்தி வழங்கக் கோரியும், கால்நடை தீவனத்தை மானிய விலையில் ஆவின் நிா்வாகம் வழங்கக்கோரியும், அங்கன்வாடி மையங்களில் ஆவின் பாலை கொள்முதல் செய்து குழந்தைகளுக்கு வழங்கக் கோரியும், ஆத்தங்குடி, முத்துப்பட்டினம் பண்ணைகளில் பால் வழங்கியவா்களுக்கு உரிய தொகையை வழங்கிடக் கோரியும் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com