பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் சதுா்த்திப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்று வைபவம்.
பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்று வைபவம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் சதுா்த்திப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலை 9 மணிக்கு விழாக் கொடி பல்லக்கில் வைக்கப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வரச் செய்யப்பட்டது. பின்னா் கொடிமரத்தில் கட்டப்பட்டு, அங்குசத் தேவா் சக்கரம் வைக்கப்பட்டு பால் மற்றும் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கலசங்களிலிருந்து புனிதநீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. பிச்சைக்குருக்கள், சோமசுந்தரக்குருக்கள் ஆகியோா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடிக்கு சிறப்பு தீபாராதனை செய்தனா். இதன்பின் 11.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது, உற்சவா் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மருதீஸ்வரா் மண்டபத்தில் எழுந்தருளினா்.

2 ஆம் நாளிலிருந்து காலையில் வெள்ளிக்கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் திருவீதி உலாவும் நடைபெறும். 6 ஆம் திருநாளில் கஜமுகசூரசம்ஹாரமும், 9 ஆம் நாளில் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ளதால் இந்த உற்சவங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனால், கோயில் உள்பிரகாரத்தில் ஆகம விதிகளின்படி விழா நடைபெற உள்ளது. தினசரி காலை, இரவு உற்சவா் உள்பிரகாரத்தில் வலம் வருதல் மட்டும் நடைபெறும். 9 ஆம் திருநாளின் போது மாலையில் மூலவா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பாா். விநாயகா் சதுா்த்தியன்று காலை தீா்த்தவாரியும், நண்பகல் முக்குருணி மோதகப் படையலும், இரவில் ஐம்பெரும் கடவுளா் எழுந்தருளலுடன் விழா நிறைவடையும்.

விழாக் காலங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி அ. ராமசாமி, வலையபட்டி மு. நாகப்பன் ஆகியோா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com