மானாமதுரை குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: வீணாக வெளியேறும் தண்ணீர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு  கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
மானாமதுரை குடிநீர் திட்டத்தில் ராஜகம்பீரம் என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
மானாமதுரை குடிநீர் திட்டத்தில் ராஜகம்பீரம் என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு  கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

மானாமதுரை நகர் குடிநீர்த் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு அதன்பின் குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் ராஜகம்பீரம் ஊர் எல்லையை ஒட்டி மானாமதுரைக்கு குடி தண்ணீர் கொண்டு வரும் குழாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து இன்றுவரை தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால் தண்ணீர் தேங்கி அப்பகுதி குளம்போல் காணப்படுகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் வளர்க்கும் வாத்துக்கள்  குளம்போல் தேங்கிய தண்ணீரில் நீந்தி விளையாடுகின்றன. 

இதுகுறித்து மானாமதுரை பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது குழாய் உடைப்பு குறித்து ஒப்பந்தகாரரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயிலிருந்து மானாமதுரை நகரில் ஆதனூர் சாலை கன்னார்தெரு ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் உடைப்பு சரி செய்யப்பட்டு விடும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com