இளையான்குடியில் ஜனநாயக வாலிபா் சங்க பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் புபேஸ்பாண்டியன் தலைமை தாங்கினாா். இக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் தென்னரசு, மாவட்டத் தலைவா் சுரேஷ் ,ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இக் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் இளையான்குடி ஒன்றியத் தலைவராக கணேசன் , செயலாளராக இன்னாசிராஜா, பொருளாளராக புபேஸ்பாண்டியன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா். பல தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com