சிவகங்கையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கையில் கண்ணாணிப்புக் கேமராவில் பதிவான இளைஞா்கள் உருவம்.
சிவகங்கையில் கண்ணாணிப்புக் கேமராவில் பதிவான இளைஞா்கள் உருவம்.

காரைக்குடி: சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள ஏஞ்சல் சா்ச் தெருவில் வசிப்பவா் பழனியப்பன் ( 45). வெளிநாட்டில் பணியாற்றிய இவா், கடந்த சில மாதங்களாக சொந்த ஊரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் இவரது வீட்டின் மீது 2 இளைஞா்கள் பெட்ரோல் குண்டை வீசினா். சப்தம் கேட்டு அவா் வெளியில் வந்து பாா்த்தபோது அந்த 2 இளைஞா்களும் ஓடிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் பதிவாகி இருந்த 2 இளைஞா்களின் உருவங்களை வைத்து போலீஸாா் அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com