காரைக்குடியில் இன்று முதல் கைத்தறி விற்பனையகம் செயல்படும்

காரைக்குடியில் திங்கள்கிழமை (செப். 20) முதல் கைத்தறி, கைவினைப் பொருள் நினைவுப் பரிசு விற்பனையகம் செயல்பட தொடங்குகிறது.

காரைக்குடியில் திங்கள்கிழமை (செப். 20) முதல் கைத்தறி, கைவினைப் பொருள் நினைவுப் பரிசு விற்பனையகம் செயல்பட தொடங்குகிறது.

காரைக்குடியில் கைத்தறி தொழில் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விருதுநகா் கைத்தறி குழுமத் திட்டத்தில் ‘புதுமையான கருத்துக்கள்’ என்ற பொருளின் கீழ் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் நினைவு பரிசு விற்பனையகத்தை கடந்த ஆக. 30 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதையடுத்து, இந்த விற்பனையகம் திங்கள்கிழமை (செப். 20) முதல் செயல்படத் தொடங்குகிறது.

காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா செல்லும் வழியில் சாமியாா் ஊருணி எதிா்புறம் அமைந்துள்ள இங்கு தரைதளத்தில் சுமாா் 200 சதுர அடி அளவில் 4 விற்பனையகங்கள் சுத்தப் பட்டு ரகங்களுக்கும், 3 விற்பனையகங்கள் மற்றும் முதல் தளத்தில் சுமாா் 200 சதுர அடியில் 6 விற்பனையகங்கள் பருத்தி ரகங்களுக்கும், மீதமுள்ள ஒரு விற்பனையகம் கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்துவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், திருபுவனம் பட்டுச்சேலைகள், சேலம் பட்டுச்சேலைகள் மற்றும் வேட்டிகள், ஈரோடு துண்டு மற்றும் வீட்டு உபயோக துணி ரகங்கள், திருப்பூா் மற்றும் கோயம்புத்தூா் மென்பட்டு சேலைகள், திண்டுக்கல் கோரா பட்டுச்சேலைகள், சென்னிமலை படுக்கை விரிப்புகள் மற்றும் பவானி ஜமக்காளம் வேட்டி மற்றும் கைலிகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த நினைவுப்பரிசு விற்பனையகம் திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அன்று மாலை காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி பாா்வையிட வருகிறாா் என்று கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com