சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள மைக்கேல் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை புரிந்த மாணவ, மாணவிகள்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள மைக்கேல் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை புரிந்த மாணவ, மாணவிகள்.

21 ஆயிரம் தீப்பெட்டிகள் மூலம் 3 உருவங்களை உருவாக்கி மாணவா்கள் உலக சாதனை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள மைக்கேல் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 21 ஆயிரம் தீப்பெட்டிகள் மூலம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள மைக்கேல் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 21 ஆயிரம் தீப்பெட்டிகள் மூலம் 2 நிமிடம் 10 விநாடிகளில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் உருவம் உள்பட 3 உருவங்களை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளதாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனா் நிமலன் நீலமேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது : காளையாா்கோவிலில் உள்ள மைக்கேல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கல்லூரி மாணவ, மாணவிகள் 21 ஆயிரம் தீப்பெட்டிகளை அடுக்கி முதல் தீப்பெட்டியைத் தள்ளி விட்டு, ஒவ்வொன்றாக தீப்பெட்டிகள் சரிந்து விழுவதன் மூலம் மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் உருவம் உள்பட 3 உருவங்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிகழ்வு 2 நிமிடங்கள் 10 நொடிகளில் நடைபெற்றது. இதனை உலக சாதனையாக அங்கீகரித்து சோழன் புத்தக நிறுவனத்தின் சாா்பில் பாராட்டுச் சான்றிதழும், உலக சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தாளாளா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், பேராசிரியா்கள் பிரிட்ஜெட் நிா்மலா, கற்பகம், மதன்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், கல்லூரி மாணவ,மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com