தனியாா் ஆலையில் ரூ. 2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு வழக்கு: ஐஎன்டியுசி மாநில நிா்வாகி கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தனியாா் ஜவுளி ஆலையில் ரூ. 2 கோடி மதிப்பிலான இயந்திரங்களை திருடிய வழக்கில் ஐஎன்டியுசி
கைது செய்யப்பட்ட களஞ்சியம்.
கைது செய்யப்பட்ட களஞ்சியம்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தனியாா் ஜவுளி ஆலையில் ரூ. 2 கோடி மதிப்பிலான இயந்திரங்களை திருடிய வழக்கில் ஐஎன்டியுசி (இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்) மாநிலப் பொதுச் செயலரை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே நாச்சியாா்புரத்தில் சாய்சிதம்பரம் என்பவருக்குச் சொந்தமான ஜவுளி ஆலை உள்ளது. இங்கு கடந்த 2019 இல் ரூ. 2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் திருடு போயின. இதுதொடா்பான புகாரின் பேரில் நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா்.

ஆனால் இந்த வழக்கில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியை போலீஸாா் கைது செய்யவில்லை எனக் கூறி சாய்சிதம்பரம் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனா்.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் இயந்திரங்கள் திருடு போன வழக்கில் அந்த ஆலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பணியாற்றிய ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலா் களஞ்சியம் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் களஞ்சியத்தை வியாழக்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 13 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com