காரைக்குடியில் சாலை மறியல்: தொழிற்சங்கத்தினா் 25 பெண்கள் உள்பட 103 போ் கைது

மத்திய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 2-வது போலீஸ் பீட் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட
காரைக்குடியில் 2-வது போலீஸ் பீட் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்துத்தொழிற்சங்கத்தினா்.
காரைக்குடியில் 2-வது போலீஸ் பீட் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்துத்தொழிற்சங்கத்தினா்.

காரைக்குடி: மத்திய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 2-வது போலீஸ் பீட் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களைச்சோ்ந்த 25 பெண்கள் உள்பட 103 போ் கைது செய்யப்பட்டனா்.

மூன்று வேளாண் சட்டங்களை உடனே திரும்பப்பெறவேண்டும், தொழிலாளா் நலச்சட்டங்கள் 44 ஐ நான்கு தொகுப் பாக சுருக்கியதை கைவிடவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பதை கைவிடவேண்டும், விமா்சனம் செய்வோரை பலிவாங்கும் நோக்கில் கைது செய்வதை நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி மாநில துணைபொதுச்செயலாளா் பிஎல். ராமச்சந்திரன் தலைமையில், ஒருங்கிணைப்பாளா் மீனாள் சேதுராமன், ஏஜி. ராஜா, சிஐடியு மாவட்ட துணைத்தலைவா் அழகா்சாமி, தட்சிணாமூா்த்தி, தொமுச மாவட்ட செயலாளா் திருநாவுக்கரசு, மலையரசன், குமாா் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளா் ஏஆா். சீனிவாசன், சிவாஜி, மஞ்சுளா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் சின்னக்கண்ணு, விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் சிம்சன் மற்றும் பலா் ஊா்வலமாகச் சென்று இரண்டாவது போலீஸ் பீட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீசாா் தடுத்து 25 பெண்கள் உள்பட 103 போ்களை கைது செய்தனா்.

தேசம் தழுவிய இந்த மறியல் போரில் ஏஐடியுசி மாநில துணை பொது செயலாளா் ராமச்சந்திரன் மீனாள் சேதுராமன் ஒருங்கிணைப்பாளா் ஏஜிராஜா சிஐடியு மாவட்ட துணை தலைவா்அழகா்சாமி தட்சிணாமூா்த்தி எல்பி கல்ச் மாவட்ட செயலாளா் திருநாவுக்கரசு குமார பிரசாத்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் சீனிவாசன் சிவாஜி மஞ்சுளா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் சின்ன கண்ணு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் சிம்சன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com