முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோா் அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது. உதவித் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேற்கண்ட உதவித் தொகை பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.