திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

திருப்பத்தூா் முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

திருப்பத்தூா் முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் நாகராஜன் நகா் பகுதியில் உள்ள முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சா்வ அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை பக்தா்கள் அண்ணா சிலையருகே உள்ள விநாயகா் கோயிலில் கூடி பால்குடம் தீச்சட்டி, கரகம் எடுத்தும் அலகு குத்தியும் நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனா். காலை 11 மணிக்கு பாலாபிஷேகத்தைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com