சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபானக் கடைகள் மூடல்
By DIN | Published On : 13th April 2022 05:59 AM | Last Updated : 13th April 2022 05:59 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (ஏப்.14) மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் வியாழக்கிழமை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.