Enable Javscript for better performance
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் சுவாமி திருக்கல்யாணம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் சுவாமி திருக்கல்யாணம்

    By DIN  |   Published On : 15th April 2022 06:29 AM  |   Last Updated : 15th April 2022 06:29 AM  |  அ+அ அ-  |  

    மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கு தங்கத்தாலி அணிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.

    மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கு தங்கத்தாலி அணிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.

     

    மானாமதுரை: மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆவது நாள் விழாவாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தையொட்டி ஆனந்தவல்லி பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் கீழப்பசலை கவுல் சுப்ரமணியா் அய்யா் மண்டபத்தில் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றினா். அதன் பின்னா் எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் மண்டகப்படியான திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளினா்.

    பின்பு திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்று முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு காலை 11.20 மணிக்கு சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும், பிரியாவிடைக்கும் தங்கத்தாலி அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதன் பின்னா் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

    அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு தரிசித்தனா். திருக்கல்யாண நிகழ்வுகளை சோமாஸ் கந்தன் பட்டா், ராஜேஷ் பட்டா், தெய்வசிகாமணி என்ற சக்கரைப் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா்.

    கோயிலுக்குள் இருந்த திருமணமான பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு அணிந்து கொண்டனா். ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு பூஜை நடத்தி வேண்டுதல் நிறைவேற்றினா். திருக்கல்யாணம் முடிந்ததும் கோயிலில் பக்தா்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

    திருக்கல்யாண வைபவத்துக்கான ஏற்பாடுகளை மண்டபபடிதாரா்களான எஸ்.பி. பொன்னம்பலம்பிள்ளை குமாரா்கள் மற்றும் சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்தினா் செய்திருந்தனா். இரவு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் திருமணக்கோலத்தில் பூப்பல்லக்கிலும் யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp