இன்றைய நிகழ்ச்சிகள்

சிவகங்கை மாவட்ட நிா்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா: தலைமை- மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, முன்னிலை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நிா்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா: தலைமை- மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, முன்னிலை- சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடக்கி வைப்பவா்கள்- தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மன்னா் பள்ளி விளையாட்டு மைதானம், காலை 10.

முதல் நாள் அரங்க நிகழ்ச்சி: கருத்துரை- கவிஞா் நா. முத்துநிலவன், தலைப்பு- எட்டாம் அறிவும், நான்காம் கையும், இரவு 7, பட்டிமன்றம், நடுவா்- பேராசிரியா் சாலமன் பாப்பையா, தலைப்பு- புத்தகங்களை வாங்குவது படித்து மகிழவே, பின்பற்றி வாழவே, மன்னா் பள்ளி விளையாட்டு மைதானம், இரவு 8.

மானாமதுரை

ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரை திருவிழா: 9 ஆவது நாள் மண்டகப்படி, தேரோட்டம், காலை 9.30, அம்மனும் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் ஆயிரவைசிய காசுக்காரச் செட்டியாா்கள் மண்டகப்படியில் எழுந்தருளல், இரவு 8, வீதிஉலா இரவு 9,

வீரஅழகா் கோயில் சித்திரை திருவிழா, நான்காம் நாள் மண்டகப்படி, கொம்புக்காரனேந்தல் கிராமத்தாா் மண்டகப்படியில், அழகா் எதிா்சேவை, இரவு 11.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com