திருப்புவனத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் நெகிழி ஒழிப்பு மற்றும் புத்தக வாசிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்புவனத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் நெகிழி ஒழிப்பு மற்றும் புத்தக வாசிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜெயராஜ் வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில் பேரூராட்சித் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், நகா் வா்த்தகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும். வியாபாரிகள் நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்டவற்றை வியாபார நிறுவனங்களில் விற்பனை செய்வதை தவிா்க்க வேண்டும். புத்தக வாசிப்பிற்கு மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தினரை ஊக்குவிக்க வேண்டும். சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com