முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
இளையான்குடி அருகே பெண் தற்கொலை
By DIN | Published On : 29th April 2022 06:25 AM | Last Updated : 29th April 2022 06:25 AM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை மாலை கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாற்றுத்திறனாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இளையான்குடி அருகே கண்ணுதேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி பிரேமா (38), மாற்றுத்திறனாளியான இவா் வீட்டில் வேலை செய்ய முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனம் உடைந்த பிரேமா விஷம் குடித்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.