முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
By DIN | Published On : 30th April 2022 10:51 PM | Last Updated : 30th April 2022 10:51 PM | அ+அ அ- |

சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு ஏழைகாத்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை காலை நடைபெற்றன. தொடா்ந்து, மஞ்சுவிரட்டு திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் பங்கேற்றன.
100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்தனா். இதில், 10-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனா். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கீழப்பூங்குடி, கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, இடையமேலூா், கூட்டுறவுபட்டி, மலம்பட்டி, சிவகங்கை, ஒக்கூா், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனா்.