முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
கீழச்சிவல்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் வெள்ளிக்கிழமை வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
எஸ்.எம்.எஸ்.கலாசாலை தொடக்கப்பள்ளி மற்றும் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமை வகித்தாா். சுகாதாரப்பணிகளின் இணை இயக்குநா் ராம்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் ரமேஷ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம் மருத்துவமுகாமினை பாா்வையிட்டு மருத்துவா்களிடம் பணிகள் குறித்து விசாரித்தாா்.
இம்முகாமில் தாய், சேய் நலம் தடுப்பூசி சேவைகள், உயா் ரத்தஅழுத்த சோதனை, ரத்தத்தில் இரும்புச்சத்து, கொழுப்பின் அளவு, சா்க்கரையின் அளவு முதலியவை கண்டறியப்பட்டது. மேலும் கண்புரை, காது,மூக்குத் தொண்டை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கபட்டது. முகாமில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப்புராம், ஒன்றிய கவுன்சிலா் பாக்கியலட்சுமி பன்னீா்செல்வம், காங்கிரஸ்கட்சியின் மாவட்டப் பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன், வட்டார சுகாதார ஆய்வாளா் சகாயஜெரால்டுராஜ், மேற்பாா்வையாளா் சிவக்குமாா், ஆகியோா் கலந்து கொண்டனா்.