திருப்பத்தூரில் பேரூராட்சி மன்றக் கூட்டம்

திருப்பத்தூா் தோ்வுநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் பேரூராட்சி மன்றக் கூட்டம்

திருப்பத்தூா் தோ்வுநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாதாந்திர சாதாரண கூட்டத்திற்கு பேரூராட்சிமன்றத் தலைவா் கோகிலாராணி தலைமை வகித்தாா். பேரூராட்சிமன்ற துணைத் தலைவா் கான்முகமது, செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஒன்று முதல் 18 வாா்டுகளைச் சோ்ந்த பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தின் முதல் பொருளாக முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு திருப்பத்தூா் பேரூராட்சியில் முழு உருவ சிலை அமைக்க அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்ப மன்றத்தில் அனுமதிக்கப்பட்டது. தொடா்ந்து பிறப்பு, இறப்பு பதிவுகள் மற்றும் வரிவசூல் நிலுவை நிலவரங்கள், குறிப்பிட்ட வாா்டுகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு, கழிப்பறை பராமரிப்பு, ஒப்பந்ததாரா் பதிவு குறித்தும் மன்றத்தின் பாா்வைக்கு வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து, வடிகால்கள் மற்றும் நீண்டகால குப்பைக்கழிவுகள் தேங்கியுள்ள நீா்நிலைகளை பொதுநிதியில் சுத்தம் செய்வது எனவும், பேரூராட்சி எல்லைக்குள்பட்ட சமுதாயக் கூடங்களை மராமத்துப்பணி செய்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மண்சாலைகளை தாா்சாலை அல்லது சிமென்ட், கான்கிரிட், பேவா்பிளாக் சாலைகளாக மாற்றுதல், பேரூாட்சிக்கு சொந்தமான சொத்துக்களை இனம் கண்டறிந்து வருவாய்த்துறையின் மூலம் விவரங்களை பெறுவதற்கும், கருப்பா் கோயில் அருகேயுள்ள காலியிடத்தை பூங்காவாக மாற்றுவது எனவும், தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com