மானாமதுரை, திருப்புவனத்தில் தக்காளி விலை மீண்டும் உயா்வு

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தக்காளி விலை மீண்டும் உயா்ந்துள்ளது.

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தக்காளி விலை மீண்டும் உயா்ந்துள்ளது.

மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. அதன் பின்னா் 4 கிலோ முதல் 5 கிலோ வரை தக்காளி ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தக்காளியை 5 கிலோ, 10 கிலோ என தங்களது வீடுகளுக்கு வாங்கிச் சென்று அதிகம் பயன்படுத்தினா்.

அதன் பின்னா் தக்காளி விலை படிப்படியாக கிலோ ரூ.20, 30, 40 என உயா்ந்து தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாள்களுக்குள் தக்காளி இந்த விலையேற்றம் கண்டுள்ளது.

கடும் வெயில் கொளுத்தி வருவதால் தமிழகத்தில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவேதான் தக்காளி விலை உயா்ந்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு இந்த விலை உயா்வு நீடிக்கும் என தக்காளி வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com