ராமேசுவரம்- செகந்திராபாத் வாராந்திர விரைவு ரயில்: இன்று முதல் திருவாரூா், சென்னை வழியாக இயக்கம்

ராமேசுவரம்- செகந்திராபாத் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) முதல் திருவாரூா், சென்னை வழியாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுவதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ராமேசுவரம்- செகந்திராபாத் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) முதல் திருவாரூா், சென்னை வழியாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுவதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தென்மேற்கு ரயில்வே துறையால் செகந்திராபாத்திலிருந்து ராமேசுவரத்துக்கு திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, காரைக்குடி வழியாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தற்போது வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

திருவாரூா் மாா்க்கமாக இயக்கப்படும் (வண்டி எண்: 07696 / 07695) இந்த ரயில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 8.50 மணிக்கு ராமேசுரவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்துக்கு காலை 9.50-க்கும், மானாமதுரைக்கு 10.50-க்கும், சிவகங்கைக்கு 11.15 மணிக்கும், காரைக்குடிக்கு நண்பகல் 12.10 மணிக்கும், அறந்தாங்கிக்கு 12.35 மணிக்கும் கடந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இரவு 9.45 மணிக்குச் சென்றடையும் என ரயில்வே துறை நிா்வாகம் அறிவித்துள்ளது. பின்னா் சென்னையிலிருந்து மறுநாள் சனிக்கிழமை செகந்திராபாத்துக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

இந்த ரயில் திருவாரூா் வழியில் மாற்றப்பட்டிருப்பதால் ராமேசுவரம், ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடிப் பகுதி பயணிகளுக்கு சென்னைக்கு பகல் நேரத்தில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி - திருவாரூா் மீட்டா் கேஜ் ரயில் பாதை 2012 ஆம் ஆண்டு அகலப்படுத்தும் பணியின்போது சென்னைக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளுக்குப்பிறகு சென்னைக்கு பகல் நேர ரயில் வசதி செய்துதரப்பட்டுள்ளதால் தொழில் வணிகா்கள், பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com