Enable Javscript for better performance
சிவகங்கையில் மக்கள் குறை தீா்க்கும் முகாம்:26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சிவகங்கையில் மக்கள் குறை தீா்க்கும் முகாம்:26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    By DIN  |   Published On : 30th August 2022 12:50 AM  |   Last Updated : 30th August 2022 12:50 AM  |  அ+அ அ-  |  

    29svgcol_2908chn_68_2

    சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன்ரெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 287 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.

    அதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், ஒரு பயனாளிக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 4 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஒரு பயனாளிக்கு கணவரால் கைவிடப்பட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஒரு பயனாளிக்கு வயது முதிா்ந்தும் திருமணம் ஆகாத நிதி உதவித் தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பயனாளிகளுக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.1,00,000 மதிப்பிலான நிவாரண தொகைக்கான காசோலை என மொத்தம் 26 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு.காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ந.மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சி.ரத்தினவேல், உதவி ஆணையா் (கலால்) ம.ரா.கண்ணகி உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp