காரைக்குடி பகுதியில் செப். 3 இல் மின்தடை
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (செப். 3) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ் நாடு மின் தொடா் அமைப்புக்கழகத்தின் காரைக்குடி கோட்ட செயற் பொறியாளா் எம். லதா தேவி தெரிவித்துள்ளாா்.