சிவகங்கை நகராட்சியில் 125 போ் போட்டி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளா் பட்டியலில் சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 125 போ் போட்டியிடுகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளா் பட்டியலில் சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 125 போ் போட்டியிடுகின்றனா்.

இந்நகராட்சியில் உள்ள 27 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 152 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில், 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், 25 போ் தங்களது வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இறுதியாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளா் பட்டியலில் திமுக -21, அதிமுக -26, காங் -5, பாஜக -13, தேமுதிக-2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -1, அமமுக -13, நாம் தமிழா் கட்சி -9, மக்கள் நீதி மய்யம்-2, எஸ்டிபிஐ -1, சுயேச்சைகள் 32 என மொத்தம் 125 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com