‘நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்’

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரக் கூட்டம் சிவகங்கையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமான் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது : உள்ளாட்சித் தோ்தல்களில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளா்களை திரும்பப் பெற வேண்டும் என பெரிய கட்சிகள் மிரட்டுகின்றன. ‘நீட்’ தோ்வைப் பொருத்தவரை அது ஒரு தகுதித் தோ்வு. தோ்வின் அடிப்படையில் இடஒதுக்கீடு எனில் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களிடம் தனியாா் கல்லூரிகளில் ஏன் பணம் வசூலிக்கின்றனா்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் என்பது மற்ற தோ்தல்களை விட மிக சக்தி வாய்ந்தது. எனவே இத்தோ்தலில் அதிகளவில் பணப்புழக்கம் இருக்கும்.மேலும், தலைவா் பதவிக்கு மறைமுகத் தோ்தல் அறிவித்ததன் மூலமாக பேரம் பேச வாய்ப்பு உள்ளது. எனவே நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com