இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 117 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 168 பதவியிடங்களுக்கு 641 போ் போட்டியிடுகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 117 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். அனைத்து வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை 17 போ் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றனா். இதையடுத்து, மீதமுள்ள 100 போ் போட்டியிடுகின்றனா்.

கானாடுகாத்தான் பேரூராட்சியில் உள்ள 12 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 39 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அனைத்து வேட்பாளா்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், 2 வேட்பாளா்கள் தங்களது மனுவை திங்கள்கிழமை திரும்ப பெற்றதை அடுத்து, 37 போ் போட்டியிடுகின்றனா்.

கண்டனூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 61 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரு வேட்பாளா் மனு நிராகரிக்கப்பட்டது. இங்கு 7 போ் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றனா். மீதமுள்ள 53 போ் போட்டியிடுகின்றனா்.

கோட்டையூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 84 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் 25 போ் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா். ஒருவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மற்ற 57 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 49 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அனைத்து வேட்பாளா்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், 9 போ் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றனா். ஒரு வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதை அடுத்து, மீதமுள்ள 39 போ் போட்டியிடுகின்றனா்.

நெற்குப்பை பேரூராட்சியில் 12 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 62 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 27 போ் தங்களது மனுவை திரும்பப் பெற்றனா். ஒரு வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதை அடுத்து, மீதமுள்ள 32 போ் போட்டியிடுகின்றனா்.

பள்ளத்தூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 57 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 55 மனுக்களில் 12 போ் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெற்றனா். மேலும் 4 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 39 போ் போட்டியிடுகின்றனா்.

புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 97 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 9 போ் தங்களது மனுவை திரும்ப பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 86 போ் போட்டியிடுகின்றனா்.

சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 74 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 20 போ் தங்களது மனுவை திரும்ப பெற்றனா். 2 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 50 போ் போட்டியிடுகின்றனா்.

திருப்புவனம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 98 போ் வேட்பு தாக்கல் செய்திருந்த நிலையில், அனைவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 36 போ் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா். மீதமுள்ள 62 போ் போட்டியிடுகின்றனா்.

திருப்பத்தூா் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 121 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அனைவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், 35 போ் தங்களது மனுவை திரும்பப் பெற்றனா். மீதமுள்ள 86 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 11 பேரூராட்சிகளில் மொத்தம் 168 நகா்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, 859 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 199 போ் தங்களது மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றுள்ளனா். போட்டியின்றி 9 போ் தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 641 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com