முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காரைக்குடிமருத்துவா் போக்சோவில் கைது
By DIN | Published On : 07th February 2022 11:55 PM | Last Updated : 07th February 2022 11:55 PM | அ+அ அ- |

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகாரின்பேரில் காரைக்குடி தனியாா் மருத்துவமனை மருத்துவரை போக்சோ சட்டத்தின்கீழ் திங்கள் கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த 17 வயது மாணவி, திண்டுக்கல் கல்லூரியில் பொறியியல் பயின்று வருகிறாா். இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளாா். தந்தை வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். சிறுமியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
அந்த மருத்துவமனையின் எலும்பு முறிவு மருத்துவா் மோகன்குமாருக்கும் (45), மாணவியின் தாயாருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற மருத்துவா் மோகன்குமாா், கல்லூரி மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாணவி ஆன்-லைனில் காவல்துறைக்கு புகாா் அளித்துள்ளாா். இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உத்தரவின் பேரில் காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி மேற்பாா்வையில் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து காரைக்குடி அனைத்து மகளிா் நிலைய ஆய்வாளா் ஜெயமணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருத்துவா் மோகன்குமாரை கைது செய்தாா்.