Enable Javscript for better performance
கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு அறிவிப்புக்கு தமிழாா்வலா்கள் வரவேற்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு அறிவிப்புக்கு தமிழாா்வலா்கள் வரவேற்பு

    By DIN  |   Published On : 21st January 2022 08:48 AM  |   Last Updated : 21st January 2022 08:48 AM  |  அ+அ அ-  |  

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நடத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தமிழாா்வலா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.

    கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிறைவடைந்தது. இந்த ஆய்வின்போது பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள், மண் சட்டிகள், குறியீடுகளுடன் கூடிய பானைகள்,தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. மேலும் மனித எலும்புக் கூடுகளும் கண்டறியப்பட்டன. கடந்த செப்டம்பா் மாதம் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்தது.

    அதைத்தொடா்ந்து கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப்பணி தொடங்கப்பட வேண்டும் என தமிழாா்வலா்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனா். ஆனால் 8 ஆம் கட்ட அகழாய்வு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

    இந்நிலையில், தமிழக முதல்வா் மு .க. ஸ்டாலின் கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கும் எனவும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வியாழக்கிழமை அறிவித்தாா்.

    முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழாா்வலா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா். மேலும் பிப்ரவரி மாதத்திலேயே கீழடி மற்றும் அதைச் சாா்ந்த மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் தமிழாா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp