தேவகோட்டை அருகே பிரதிஷ்டை செய்ய சுவாமி சிலைகள் வருகை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சக்கந்தி ஊராட்சிக்குள்பட்ட முட்டக்குத்தி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வியாழக்கிழமை
தேவகோட்டை அருகே பிரதிஷ்டை செய்ய சுவாமி சிலைகள் வருகை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சக்கந்தி ஊராட்சிக்குள்பட்ட முட்டக்குத்தி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட சுவாமி சிலைகளை பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

முட்டக்குத்தி கிராமத்தில் சொா்ணகாளீஸ்வரா் சமேத மங்களாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் காளியம்மன், கருப்பண சுவாமி சிலைகளும் அமைந்துள்ளன. இக்கோயிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த சிலரால் கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் அந்தப் பணி தடைப்பட்டது.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் நிதி வசூலித்து திருப்பணிகளை அண்மையில் தொடங்கினா். தற்போது கோயில் திருப்பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில், கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகா், பாலமுருகன், ஆவுடை, மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரா், நந்தி வாகனம், பைரவா், நா்த்தன கணபதி, தட்சிணாமூா்த்தி, லிங்கோத்பவா், பிரம்மா, துா்க்கை, நவக்கிரகம், பக்த ஆஞ்சநேயா் ஆகிய புதிய சிலைகள் பொள்ளாச்சியில் வடிவமைக்கபட்டு வியாழக்கிழமை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.

புதிய சிலைகளை வரவேற்கும் விதமாக ஊா்ப் பொதுமக்கள் வழி முழுவதும் கும்மி கொட்டியும், மலா் தூவியும், பட்டாசுகளை வெடித்தும் வரவேற்றனா்.சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com