போடி அரசு பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு
By DIN | Published On : 03rd June 2022 12:00 AM | Last Updated : 03rd June 2022 12:00 AM | அ+அ அ- |

போடி அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்றோா்.
போடி அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது.
போடி அரசு பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில், தேசிய அளவிலான ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு, கல்லூரி கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் வ. திருநாவுக்கரசு தலைமை வகித்து, கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். தேனி மாவட்ட பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளா் பி. ராமா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
கருத்தரங்கில், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்ந்த பல்வேறு கண்டுபிடிப்புகள், கருவிகள், இயந்திரங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. தொழில்நுட்ப விநாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டு, சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்க மலா் வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை, போடி அரசு பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.