சிவசெண்பக அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா

திருப்புவனம் அருகே உள்ள ஓடாத்தூா் சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள ஓடாத்தூா் சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த மே 31 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, தினசரி கிராம பரிவாரத் தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அந்தப் பகுதியில் உள்ள வேளாா் சுதையிலிருந்து புரவிகள் எடுத்து வரப்பட்டு, ஓடாத்தூா் விநாயகா் கோயில் முன்பாக இறக்கி வைக்கப்பட்டன. அதன்பின், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

புதன்கிழமை புரவிகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனாா் கோயிலில் இறக்கி வைக்கப்படும். விழாவில், ஓடாத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com