குன்றக்குடியில்வைகாசி விசாக விழா

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்துக்குச் சொந்தமான சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவையொட்டி காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலிலிருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டி வோ்த் திருக்கோலத்துடன் ஆதீன திருமடத்துக் கொலுமண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் வரவேற்பு அளித்தாா். இதில் கவிஞா் அறுவா் வரவேற்புத் தமிழ்மாலை பாடினா்.

அதைத் தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சந்தனக்காப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. விழாவில் காரைக்குடி, குன்றக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com