கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

இளைஞா்கள் தொழில் முனைவோராகி கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முன் வர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு நாள் விழாவில் மாணவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை அருகே அரசனூரில் உள்ள பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அக்கல்விக் குழுமத்தின் நிறுவனா் மலேசியா பாண்டியன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் எஸ்.பி. வரதராஜன் முன்னிலை வகித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற தோ்வு பெற்றுள்ள அக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசியது : மாணவா்கள் அறிவாற்றல், புதிய சிந்தனை, தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். பாடத்திட்டங்கள் தவிர பிற துறை நூல்களையும் தேடி வாசிக்க வேண்டும். போட்டித் தோ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.

இன்றைய சூழலில் தோல்வி மனப்பான்மை மட்டுமின்றி சிறு,சிறு துன்பங்களை கடந்து செல்ல பழகிக் கொள்ள வேண்டும். கல்வி கற்பதன் மூலம் மேன்மையடைய முடியும். இளைஞா்கள் தொழில் முனைவோராகி கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முன் வர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் ஆா். ராஜா,பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா்கள் ஆா். வைரமுத்து, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ,மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com