திருப்பாச்சேத்தி அருகே பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சேவை குறைக்கப்பட்டதால் வியாழக்கிழமை நகா் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.
திருப்பாச்சேத்தி அருகே பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சேவை குறைக்கப்பட்டதால் வியாழக்கிழமை நகா் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

மதுரையிலிருந்து மழவராயனேந்தல் கிராமத்திற்கு தினமும் 6 முறை நகா் பேருந்து சேவை நடைபெற்று வந்தது. இந்த சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது காலை, மாலை என இரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கூடுதல் முறை பேருந்தை இயக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலையில் மழவராயனேந்தல் கிராமத்திற்கு வந்த பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினா். ஏற்கெனவே இயக்கப்பட்டதுபோல் ஆறு முறை பேருந்தை இயக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பாச்சேத்தி போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனா். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக பேருந்து புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com