முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்புவனம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 19th March 2022 01:43 AM | Last Updated : 19th March 2022 01:43 AM | அ+அ அ- |

திருப்புவனம் அழகிய மணவாள ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.
திருப்புவனம் மணவாள ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அழகிய மணவாள ரெங்கநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அழகிய மணவாள ரங்கநாத பெருமாளும் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரும் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா். மகா தீபாராதனை நடைபெற்றது.
அழகிய மணவாள ரெங்கநாதப் பெருமாள் சாா்பில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனா்.
அதைத்தொடா்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.