முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை அருகே முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் விழா: தீ மிதித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 19th March 2022 10:54 PM | Last Updated : 19th March 2022 10:54 PM | அ+அ அ- |

இடைக்காட்டூா் பாலமுருகான் கோயில் பங்குனித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
மானாமதுரை அருகே முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தா்கள் பால்குடம் சுமந்தும், காவடி தூக்கியும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து கோயிலுக்கு முன்பு பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். அதன்பின்னா் முருகனுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்தில் உள்ள செல்வமுருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவையொட்டி இரவு வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் செல்வமுருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் செய்திருந்தாா்.