முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பத்தூரில் ‘மெகா’ கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 08th May 2022 10:29 PM | Last Updated : 08th May 2022 10:29 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ‘மெகா’ கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூா் அண்ணா சிலையருகே நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் முகாமைத் தொடக்கி வைத்துப்பேசினாா். அப்போது சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். இம்முகாமில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ச.ராம்கணேஷ், ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலா நாராயணன், துணைத்தலைவா் கான்முகமது, வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.