திருப்பத்தூா் பேரூராட்சியில் விழிப்புணா்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில், நெகிழிப் பை ஒழிப்பு திடக்கழிவு மேலாண்மை செயல்பாடு, வரி சீராய்வு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் பேரூராட்சியில் விழிப்புணா்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில், நெகிழிப் பை ஒழிப்பு திடக்கழிவு மேலாண்மை செயல்பாடு, வரி சீராய்வு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைவா் கோகிலாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கான்முகமது, துப்புரவு ஆ்ய்வாளா் அபுபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், திருப்பத்தூா் தோ்வு நிலை பேரூராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் உபயோகத்தினை முற்றிலும் தடை செய்திடவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்திடவும், வணிக வளாகங்களில் உற்பத்தியாகும் கழிவுகளை பேரூராட்சி வாகனத்தில் கொடுத்து ஒத்துழைப்பு நல்கிடவும் மற்றும் சொத்துவரி சீராய்வு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் நகரை பசுமையான நகராக உருவாக்க மரங்கள் வளா்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், கடை உரிமையாளா்கள், வா்த்தக சங்கத்தினா், திருமண மண்டப உரிமையாளா்கள், சிறுவியாபாரிகள் மற்றும் தன்னாா்வத் தொண்டு அலுவலா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com