68 கிராம ஊராட்சிகளில் இன்று மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 68 கிராம ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை(மே 10) மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 68 கிராம ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை(மே 10) மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டுக்கு 68 கிராம ஊராட்சிகளில் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை வட்டாரத்தில் வானியங்குடி, சக்கந்தி, மாங்குடி,தெற்குவாடி, காஞ்சிரங்கால், ஆலங்குளம், அலவாக்கோட்டை, தேவகோட்டை வட்டாரத்தில் திருமணவயல், கீழசனி, நாகடி, சிறுவத்தி, கண்டதேவி திருவேகம்பத்து, வீரை, குருந்தனகோட்டை ஆகிய கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, இளையான்குடி வட்டாரத்தில் காரைக்குளம், தடியமங்கலம், தாயமங்கலம், சாலைகிராமம், நகரகுடி, பெரும்பாச்சேரி, காளையாா்கோவில் வட்டாரத்தில் சிரமம், சிலுக்கப்பட்டி, மேலமருங்கூா், இலந்தக்கரை, முத்தூா்வானியங்குடி, மல்லல், அதப்படக்கி அ. வேலங்குளம், கல்லல் வட்டாரத்தில் அ. சிறுவயல்,அ. கருங்குளம், பொய்யலூா், குருந்தம்பட்டு, கண்ணங்குடி வட்டாரத்தில் சிறுவாச்சி, கண்ணங்குடி, பூசலக்குடி, களத்தூா் ஆகிய கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, மானாமதுரை வட்டாரத்தில் மாங்குளம், செய்களத்தூா், கல்குறிச்சி, கீழப்பசலை, முத்தனேந்தல்,மேலப்பசலை ஆகிய கிராமங்களிலும், எஸ்.புதூா் வட்டாரத்தில் வலசைப்பட்டி, முசுண்டப்பட்டி, செட்டிகுறிச்சி, சாக்கோட்டை வட்டாரத்தில் சங்கராபுரம், சிறுகபட்டி, செங்காந்தங்குடி, ஜெயங்கொண்டான், நாட்டுசேரி, அமராவதிபுதூா், சிங்கம்புணரி வட்டாரத்தில் எஸ். மாம்பட்டி, பிரான்மலை, எம். சூரக்குடி, வகுத்தெழுவான்பட்டி, திருப்பத்தூா் வட்டாரத்தில் திருக்கோஷ்டியூா்,இ.மாம்பட்டி, பூலாங்குறிச்சி, திருக்கோலக்குடி, காரையூா், எ. வேளங்குடி, திருப்புவனம் வட்டாரத்தில் ஏனாதி-தேளி, கலுகோ்கடை, பிரமனூா், பூவந்தி, கிளாதிரி, பொட்டபாளையம் ஆகிய கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள மண்ணை ஆய்வு செய்து பயிருக்கு தேவையான உரங்களை பயன்படுத்தலாம். இதன்மூலம், மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி விவசாயிகளுக்கு செலவும் குறையும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com