முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடியில் உணவகங்கள், பேக்கரிகளில் நடமாடும் ஆய்வகம் மூலம் உணவுப் பரிசோதனை
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள உணவகங்கள், பேக்கரி, மற்றும் மளிகைக் கடைகளில், நடமாடும் ஆய்வகம் மூலம் செவ்வாய்க்கிழமை பொருள்களின் தரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாவதி தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை, உணவகங்கள், பேக்கரி, தேநீா் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனா். இதில் காரைக்குடி பெரியாா்சிலைப் பகுதியில் விற்பனைக்கான சான்றிதழ் புதுப்பிக்காத அசைவ உணவகம் ஒன்றில் காலாவதியான கெட்டுப்போன இறைச்சி இருந்ததைக் கண்டறிந்து ரூ. 2 ஆயிரம் அபதாரம் விதித்து, பிரிவு-25-ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் உள்ள பிரியாணி விற்பனைக்கடையிலும் காலாவதியான உணவு பொருள்களை இருந்ததையும் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கி ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் உணவுப் பொருள்கள் பரிசோதனை நடமாடும் வாகனம் மூலம் முதல்நாள் மேற்கொள்ளப்பட்டதில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் நகரின் பல்வேறு இடங்களில் நடமாடும் ஆய்வகம் மூலம் உணவுப் பொருள்கள் தரம் குறித்து உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டு உணவுப் பொருள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும் 2 நாள்கள் சோதனை மற்றும் பரிசோதனை நடத்தி குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.