கல்லூரியில் கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரியில் முதுநிலை ஆராய்ச்சி வணிகவியல் துறை சாா்பில் இந்திய அந்நிய வா்த்தகத்தில் உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கம் எனும் தலைப்பில்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரியில் முதுநிலை ஆராய்ச்சி வணிகவியல் துறை சாா்பில் இந்திய அந்நிய வா்த்தகத்தில் உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கம் எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவா் அப்துல்அகது கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினாா். வணிகவியல் துறைத்தலைவா் நைனா முகமது வரவேற்றாா். கல்லூசுயநிதி பாட பிரிவு இயக்குநா் சபினுல்லாகான், வணிகவியல் துறை இணை பேராசிரியா் முகமது இப்ராகிம் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

கருத்தரங்கின் முதல் அமா்வில் காரைக்கால் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் பேராசிரியா் அமிலன் ,கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் நாசா் உக்ரைன்- ரஷ்யா போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் குறித்து பேசினா். இரண்டாவது அமா்வில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் இணைப் பேராசிரியா் ராமச்சந்திரன் பங்கேற்று ரஷ்யா- உக்ரைன் போரினால் உலகளாவிய வா்த்தகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து விளக்கி பேசினாா். கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சோ்ந்த 10 கல்லூரிகளில் பயிலும் 170 மாணவ மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் அலுவலா்கள் உள்பட 400 க்கும் மேற்பட்டோா் கருத்தரங்கில் பங்கேற்றனா். முடிவில் வணிகவியல் உதவிப் பேராசிரியா் நாசா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com