சிவகங்கையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சிவகங்கையில் ஜி.தாஸ் அறக்கட்டளை சாா்பில் மாவட்டத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சிவகங்கையில் ஜி.தாஸ் அறக்கட்டளை சாா்பில் மாவட்டத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ் வாகன சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அதன்பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது : சிவகங்கை மாவட்ட மக்களின் மருத்துவ சேவையினை கருத்தில் கொண்டு ஏற்கெனவே 31 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜி.தாஸ் அறக்கட்டளையின் சாா்பில் ரூ.21 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனம் சிவகங்கை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில், 2 செயற்கை சுவாச கொள்கலன், மானிட்டா், டீ பிரிவிலேட்டா், அறிவிப்பு பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான உயா் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) எஸ்.ராம்கணேஷ், ஜி தாஸ் அறக்கட்டளை உறுப்பினா் ஏ.மனோகரன், அறக்கட்டளை செயலா் உதயசங்கா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com