முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
100 பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கல்
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 100 பெண்களுக்கு புதன்கிழமை விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை-மேலூா் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நாகநாதன் தலைமை வகித்து, 100 பெண்களுக்கு தலா 5 ஆடுகளை வழங்கினாா். விழாவில், கால்நடை பராமரிப்புத் துறையின் உதவி இயக்குநா் ஜோஸ் அய்யாதுரை உள்ளிட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.