முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை நகராட்சி ஆணையா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 14th May 2022 11:00 PM | Last Updated : 14th May 2022 11:00 PM | அ+அ அ- |

பி. பாலசுப்பிரமணியன்.
ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிா்வாக இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையில், சிவகங்கை நகராட்சி ஆணையா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தென் மண்டல அளவிலான நகராட்சி ஆணையா்கள் ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பொன்னையா, சிவகங்கை நகராட்சி ஆணையா் பி.பாலசுப்பிரமணியனிடம் ஒரு கோப்பு சம்பந்தமாக தகவல்களைக் கேட்டுள்ளாா். அதுகுறித்து நகராட்சிப் பொறியாளரிடம் கேட்டுக் கூறுவதாக ஆணையா் தெரிவித்துள்ளாா். இதைக் கேட்ட நகராட்சி நிா்வாக இயக்குநா், ஆணையரைக் கண்டித்துள்ளாா். அதன் பின்னா், நிா்வாக இயக்குநா் கேட்ட தகவலை எடுத்துக் கூறிய போதும் கண்டித்ததால், ஆணையா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகங்கை நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து, நிா்வாக இயக்குநா் பொன்னையா சனிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், நகராட்சிப் பொறியாளா் பாண்டீஸ்வரி என்பவரை நகராட்சி பொறுப்பு ஆணையராகப் பணி நியமனம் செய்துள்ளாா்.